என்னை விற்றார்கள்: தாத்தா வயதுடையவருடன் திருமணமான சிறுமி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

நைஜிரியாவின் பெசேவே என்ற இன மக்களிடையே பணத்திற்காக சிறுமிகளை விற்பதும், பாலியல் உறவுக்காக சிறுமிகளை வாங்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

நைஜிரியாவில் பெசேவே என்ற இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிகம் வசதிகள் இல்லாமல் பெரும்பாலும் அடிமைகள் போல வாழும் இந்த மக்களிடம் பணத்திற்காக சிறுமிகளை விற்கும் வழக்கம் உள்ளது.

மேலும் அந்த சிறுமிகளை வாங்கும் ஆண்கள் பாலியல் உறவு கொள்ளவும், வேலை செய்யும் அடிமையாகவும், பாலியல் தொழிலிலும் தள்ளி பணம் சம்பாதித்து கொள்கின்றனர்.

இதில் டோரோதி என்ற சிறுமி தனக்கு ஏற்பட்ட நிலைகுறித்து குறிப்பிடும் போது தன்னை தாய் மற்றும் உறவினர்கள் பணத்திற்காக விற்றதாகவும், வாங்கியவர் தாத்தா வயதுடையவர் என்றும், அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். மேலும் தன்னை மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் பிடித்து கொண்டதாகவும் அப்போது அந்த முதியவர் தன்னுடன் உறவு கொண்டாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஹேபினஸ் என்ற சிறுமி கூறும்போது என்னை வாங்கியவர் என்னிடம் சரியாக நடந்து கொள்வதில்லை என்றும். உன்னை கொன்றாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்று கூறிவந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து அந்த ஊரின் தலைவர் கூறும் போது, தற்போது வரை இது போன்ற நடைமுறைகள் இங்கு உள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆனால் 1990க்கு பின் இது போன்ற நடைமுறைகள் எதுவும் இங்கு நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து குழந்தைகள் நல செயற்பாட்டாளர் அகோணம் ரிச்சர்ட் என்பவர் கூறியது இந்த வகை திருமணம் 2009 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டாலும் அதனால் யாரும் கைது செய்யபடவில்லை. பெரும்பாலும் சிறுமிகள் இங்கு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் கற்பமடைந்தாலும் வாங்கிய நபருக்கு அது மிகவும் லாபமான ஒன்றுதான் என்று கூறினார். மேலம் நாங்கள் தற்போதுதான் ஒரு 7 வயது சிறுமியை இத்தகைய நிகழ்விலிருந்து காத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers