மனைவி கூறிய அந்த ஒரு வார்த்தை... மாமியார்- மாமனாரை சரமாரியாக குத்திக்கொலை செய்த மருமகன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் மனைவி விவாகரத்து கேட்டதால், ஆத்திரத்தில் மாமியார், மாமனாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு ரஷ்யாவில் நிஸ்னி நோவ்கோரோட் பகுதியில் வெல்டராக பணிபுரிந்து வருபவர் அலெக்ஸி டோக்கடோவ் (39). இவருடைய மனைவி ஸ்வெட்லானா செரோவா-விற்கு 20 களில் தான் தற்போது வயது நடந்து வருகிறது.

இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன் தினம்தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், செரோவா மனமுடைந்து போயுள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த செரோவா, விவாகரத்து கொடுக்குமாறு கணவனிடம் கூறியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அலெக்ஸி, வேகமாக 4 கத்திகளை எடுத்துக்கொண்டு மனைவியை விரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன செரோவா அங்கிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக வீட்டில் இருந்த, செரோவாவின் தாய் மற்றும் 2 வயது மகள் அலெக்ஸியிடம் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் மீது அலெக்ஸி நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், அவருடைய மாமியார் பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்த அவருடைய 51 வயது மாமனார் அலெக்சாண்டர், குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கும் போது அவருக்கும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய செரோவா பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயத்துடன் கிடந்த குழந்தை மற்றும் அலெக்சாண்டரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலே அலெக்சாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி அலெக்ஸியை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers