இரண்டு இலங்கை தமிழர்கள் கைது: சிக்கிய வெளிநாட்டு பணம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மர்ம படகு மூலம் இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயல்வதாக மண்டபத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து பாம்பனிலிருந்து 7 கடல் மைல் தொலைவில் பிடிபட்ட படகில் இலங்கையைச் சேர்ந்த இருவர் இருந்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் அன்புகுமரன், சிவராஜன் எனவும் அவர்கள் மதுரையில் உள்ள ஆனைமலை அகதி முகாமில் அகதிகளாக தங்கியிருப்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்தியப் பணம் ரூ.1,09,000 மற்றும் அமெரிக்கா, ஹாங்காங் நாட்டு டாலர் கரன்சிகள், 6 மொபைல் போன்கள், ஜி.பி.எஸ் கருவிகள் 2 ஆகியன கைப்பற்றப்பட்டன.

தற்போது, அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers