கார் இருக்கையில் குழந்தையை நசுக்கி கொன்ற கொடூரன்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

இங்கிலாந்தில் குழந்தை சத்தம் எழுப்பியதால் கோபம் அடைந்த தாயின் காதலர் மின்சாரத்தில் இயங்கும் கார் இருக்கையை வைத்து நசுக்கி கொன்றுள்ளார்.

இங்கிலாந்தில் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் வாட்டர்சன் அவரது காதலி அட்ரியன் ஹோரே. இவர்கள் ஒரு பயணத்திற்காக சென்றுள்ளனர்.

அதில் கார் ஓட்டுநரான Marcus Lamb மற்றும் எமிலி வில்லியம் ஆகியோர் காரில் உடன் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அவர்களுடன் அட்ரியன ஹோரே-வின் மகனான Alfie Lamb(வயது 3) பயணம் செய்துள்ளான். இந்நிலையில் Alfie Lamb கடுமையாக கூச்சலிட்டு அவனின் அம்மாவை பார்த்து கத்தி கொண்டிருக்கிறான்.

இதை பார்த்து கோவம் அடைந்த ஸ்டிபன் வாட்டர்சன் கடுமையாக தாக்க தொடங்கி உள்ளான்.

ஆனால் அதற்கு அசராமல் குழந்தை ”அம்மா அம்மா” என்று கத்தி கொண்டிருந்திருக்கிறது.

இந்நிலையில கடும் கோவத்திற்கு ஆளான ஸ்டிபன் தனது இருக்கைக்கு பின்னால் இருந்த குழந்தையை தனது இருக்கையின் பட்டனை அழுத்தி பின்னால் தள்ளி நசுக்கி உள்ளார்.

இதில் குழந்தையின் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இந்நிலையில் இதை பார்த்த கார் ஓட்டுநரையும் அவரது காதலியையும் ஸ்டிபன் பலமாக தாக்கி உள்ளார்.

உறங்கி கொண்டிருந்த அட்ரியன் ஹோரே எழுந்து பார்த்த போது குழந்தை நிலை குலைந்திருப்பதை பார்த்து அவரசஉதவிக்கு தெரிய படுத்தி உள்ளார்.

இந்நிலையில் பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு வந்தனர்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

Mr Atkinson என்பவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் கூறியதாவது, ஸ்டிபன் கடுமையாக நடந்துள்ளார் என்றும். ஆனால் இதற்கு காரணம் குழந்தையின் தாயார் அட்ரியன ஹோரேவும் தான். அவரது கவனக் குறைவு குழந்தையை கொலை செய்ய காரணமானது என்று குறிப்பிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers