உங்களுக்கு பயங்கரமாக கோபம் வருகிறதா? அப்படியென்றால் இங்கே செல்லுங்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவில் இளைஞர் ஒருவர் கோபத்தில் இருப்பவர்களை சாந்தப்படுத்துவதற்காக கடை ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

இந்த உலகில் சில பேருக்கு கோபம் வந்துவிட்டால் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் போட்டு உடைப்பார்கள். அப்படி செய்தால் தான், அவர்களுக்கு கோபம் அடங்கும்.

இப்படி, கோபம், விரக்தி, மன அழுத்தத்தில் உள்ளவர்கள், பாட்டில்கள், பழைய பொருட்களை அடித்து நொறுக்குவதற்கு பீஜிங்கில் முதன் முறையாக ஸ்மாஷ் என்ற கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும், 20 வயது முதல் 35 வரையில் உள்ள ஏராளமானோர் இந்த கடைக்கு வருவதாக கூறும் உரிமையாளர் ஜின் மெங், மனதில் வன்முறை எண்ணம் எழுபவர்கள் இது போன்று பழைய பொருட்களை அடித்து நொறுக்கி மன நிம்மதி அடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறையில் கோபத்தை கொட்டித் தீர்க்க அரை மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ஆயிரத்து 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers