என் அம்மாவுக்கு மூன்றாவது திருமணம்: புகைப்படத்தை வெளியிட்டு அதிரவைத்த மகள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவை சேர்ந்த இளம் பெண் தனது தாய் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதை புகைப்படத்துடன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஈக்கு இடிவோர் என்ற பெண் வெளியிட்டுள்ள பதிவில், என் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வந்தார்கள், பின்னர் ஒரு சமயத்தில் என் தாயும், தந்தையும் பிரிந்துவிட்டார்கள்.

இதன்பின்னர் பீட்டர் தாமஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என் தாய்.

அவருடன் 15 ஆண்டுகள் என் தாய் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் பீட்டர் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் விக்டர் என்ற மருத்துவருடன் நட்பானார் என் தாய்.

இது காதலாக மாறிய நிலையில் சமீபத்தில் என் தாயும், பீட்டரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், காதலுடன் எப்போதும் என் தாயும், விக்டரும் சேர்ந்து வாழவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers