உள்ளாடை அணிந்து உணவு பரிமாறும் சிக்ஸ் பேக் ஆண்கள்! பார்ப்பதற்கு அலை மோதும் பெண்கள் கூட்ட புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் இருக்கும் ஹோட்டலில் பெண்கள் அணியும் உடையை அணிந்து கொண்டு சிக்ஸ்பேக்ஸ் ஆண்கள் உணவு பரிமாறும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஸ்டானீமீஹோய் என்ற உணவகம் உள்ளது. இது மற்ற உணவகங்களில் இருந்து வித்தியாசமானது.

இந்த உணவகத்தின் உணவுகளைவிட உணவு பரிமாறும் ஆண்களின் உடை, நடை, பாவனைகள்தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

அங்கிருக்கும் உணவக ஊழியர்கள் அனைவரும் சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் பெண்களின் உடைகளை அணிந்து விநோதமாகக் காட்சியளிக்கின்றனர்.

இதற்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து உணவகத்தின் உரிமையாளரான வீராசாக் மேசா கூறுகையில், ஸ்டானீமீஹோய் என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கிய பிறகு கூட்டமே வரவில்லை.

ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே கஷ்டப்பட்டேன். உணவகத்தைப் பிரபலமாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

உணவகத்துக்குள் நுழையும்போதே மக்கள் புன்னகையுடன் வரவேண்டும். சாப்பிட்டுக் கிளம்பும்வரை அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போது தான் ஆண் மாடல்களை உணவக ஊழியர்களாக நியமிக்கும் யோசனை வந்தது.

ஆனால் அது உணவகத்தின் விற்பனையைப் பல மடங்கு உயர்த்துமா என்ற சந்தேகமும் எழுந்தது.

இறுதியில் ஆண் மாடல்களுக்குப் பெண்கள் அணியும் கவர்ச்சியான உடைகளை அணிய வைப்பது என்று முடிவு செய்தேன்.

என்னுடைய இந்த முடிவை பலரும் விமர்சித்தனர். இதற்கான வேலையில் இறங்கினேன். இதனால் 3 மாதங்களுக்கு முன்பு உணவகத்தை மூடினேன்.

வேலைக்குச் சேர்ந்தவர்கள் கூட இந்த உடை என்றதும் வர மறுத்துவிட்டார்கள். இதனால் வழக்கத்தைவிட நல்ல சம்பளம் பேசி, பயிற்சியளித்தேன்.

புதிய உணவகத்தைத் திறந்தேன். வெகு விரைவில் நான் விளம்பரம் செய்யாமலே உணவகம் பிரபலமானது.

எங்கள் ஊழியர்களைப் பார்ப்பதற்காகவே வெகு தூரத்திலிருந்து மக்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

வியாபாரம் பெருகியது. பெண்கள் ரசிக்க மாட்டார்களோ என்ற அச்சம் முதலில் இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ரசிக்கிறார்கள். ஊழியர்களுடன் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் அவரை பலரும் இதே போன்று பல கிளைகளை ஆரம்பிக்கும் படி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...