இளம்பெண்ணின் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர்: வெளியான அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

நைஜீரியாவின் Akure பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான Saliu Ladayo என்பவர் 19 வயதான Chidiebere என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த Ladayo கத்தி ஒன்றை வாங்கி வந்து தமது காதலியின் மார்பை குறிவைத்து 19 முறை குத்தியுள்ளார்.

இதில் Chidiebere பரிதாபமாக மரணமடைந்தார். இந்த வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட Ladayo விசாரணை கைதியாக உள்ளார்.

இதனிடையே இளம் பெண்ணின் பெற்றோர் வினோதமாக கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது தமது மகளின் சடலத்தை Ladayo உரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும்,

இறுதிச்சடங்குக்கான அனைத்து பொருளதவியையும் Ladayo ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

ஆனால் Ladayo அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கொல்லப்பட்ட Chidiebere-ன் சடலம் கடந்த 8 மாதங்களாக பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தற்போது Ladayo மீது கொலை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers