அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு உலகின் சூப்பர் மொடல் இவள்தான்: தலை முடியால் பிரபலமான ஒரு குட்டிப்பெண்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தலை நிறைய முடியுடன், பொக்கை வாய் சிரிப்பு சிரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு குழந்தை, சூப்பர் மொடலாகியிருக்கிறாள்.

ஜப்பானில் வாழும் Baby Chanco, பிறக்கும்போதே தலை நிறைய முடியுடன் பிறந்தாள்.

அவள் பிறந்ததும் இன்னும் அதிகமாக அவள் தலையில் முடி வளர ஆரம்பித்தது. அந்த அழகு தலைமுடியுடன் கூடிய அவளது புகைப்படங்களை வாரத்திற்கு ஒருமுறை சமூக ஊடகங்களில் வெளியிடுவார் Chancoவின் தாயார்.

வெளியிடும் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது 10,000 லைக்குகளாவது விழும். Chancoவை சமூக ஊடகம் ஒன்றில் 300,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில், இணையத்தில் பிரபலமான Chancoவின் புகழைக் கண்ட Pantene நிறுவனம் ஜப்பானில் தனது விளம்பரத்திற்காக அவரை புக் செய்தது.

தற்போது ஷாம்பூ விளம்பரம் ஒன்றில், Sato Kondo என்னும் அறிவிப்பாளர் ஒருவருடன் Chancoவும் தோன்றுகிறார்.

இப்போதே இவ்வளவு பிரபலமாகிவிட்ட Chancoவைப் பார்த்தால், இன்னும் 50 வருடங்களுக்கு அவரை மிஞ்ச வேறொரு மொடல் வர முடியாது போலிருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்