வெளிநாட்டில் சிறுமியை நிர்வாண வீடியோ எடுத்து இந்தியர் செய்த செயல்.. திடுக்கிடும் பின்னணி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை தனது மனைவி என கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்தியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உதயகுமார் தக்‌ஷணாமூர்த்தி (31) என்ற இந்தியர் சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2016 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை 12 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் உதயகுமார்.

அதாவது தான் வேலை செய்யும் கடையில் இருந்து சிறுமிக்கு இலவசமாக பொருட்களை கொடுத்து அவரை மயக்கியுள்ளார்.

பின்னர் சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து தனது செல்போனில் பதிவேற்றியுள்ளார்.

இருமுறை சிறுமியுடன் உறவுகொள்ள உதயகுமார் முயன்றபோதும் அவரால் முடியவில்லை.

இதன்பின்னர் தான் வேலை பார்க்கும் கடையில் இருந்து சிறுமிக்கு இலவசமாக பொருட்களை தருவதை அவர் நிறுத்தியுள்ளார்.

இதோடு அடிக்கடி பணம் கொடுப்பதையும் நிறுத்தினார்.

சிறுமியை உதயகுமார் தனது மனைவி என கூறிய நிலையில், சிறுமி அவரை அங்கிள் என அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் உதயகுமாரின் கர்ப்பிணி காதலி அவரின் செல்போனை பார்த்த போது அதில் சிறுமியின் நிர்வாண வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

இதையடுத்து பொலிசில் அவர் புகார் அளித்தார். இதன்பின்னர் கைது செய்யப்பட்ட உதயகுமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

தற்போது இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் உதயகுமாருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 பிரம்படியும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்