பெட்ரோல் திருடிய நபருக்கு கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனை: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோவில் பெட்ரோல் திருடிய நபர் ஒருவருக்கு, அவர் வாழ்நாளில் மறக்க முடியாதபடி தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ, பெட்ரோல் திருட்டால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் திருடர்கள் பெட்ரோலை திருடி கள்ள மார்க்கெடில் விற்பதால், அது அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதோடு, பெட்ரோல் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் மெக்ஸிகோ நகரம் ஒன்றில், பெட்ரோல் திருடும்போது சிக்கிய ஒரு நபரை, திருட்டு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தாங்களே பொறுப்பேற்றுள்ள உள்ளூர் மக்கள், கடுமையாக தண்டித்தனர்.

அந்த நபரின் முதுகில் ஸ்பானிஷ் மொழியில் “திருடியதற்காக” என்று பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு வைத்து எழுதியுள்ளனர்.

வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில், இருவர் அந்த நபரை பிடித்துக் கொள்ள, முதுகில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் ஒருவர் சூடு வைக்க, அந்த நபர் சத்தமிடவும் முடியாமல் திணறும் காட்சி, வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers