சிறுவர்களுடன் தகாத உறவு...10 வயதில் மைக்கேல் ஜாக்சனால் எனக்கு நேர்ந்த கொடுமை: அம்பலமான உண்மை தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பாப் இசையுலகின் அரசன் என அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்ச்ன் சிறுவயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மைதான் என அவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நபர் தெரிவித்துள்ளார்.

அதிக மருந்துகளை உட்கொண்ட காரணத்தால் 50 வயதில் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார்.

அவர் மறைந்தாலும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ. மைக்கேல் ஜாக்சன் கடந்த 1989ம் ஆண்டில் இருந்து பல்வேறு சிறுவர்களுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாக சில தகவல்களை வெளியிட்டது.

ஜாக்சனால் 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 5 குழந்தை நடிகர்கள் மற்றும் 2 நடன கலைஞர்களும் உள்ளனர். இது போன்ற தகவல்கள் வெளிவராமல் இருப்பதற்காக 35 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையினை ஜாக்சன் செலவு செய்து உள்ளதாகவும் எப்.பி.ஐ. தகவலில் தெரிவிக்கப்பட்டு அவர் மீது வழக்குதொடரப்பட்டது.

அவர் மீது பாலியல் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் Leaving Neverland என்ற பெயரில் மைக்கேல் ஜாக்சனின் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையை பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது,

சுமார், 4 மணிநேரம் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த மாதம் Sundance Film Festival இல் திரையிடப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நபர் நடந்தவை குறித்து பகிர்ந்துள்ளார். தற்போது அவரது வயது 30.

மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வதை அதிகம் விரும்புவார் என்றும் நானும் அதில் ஒருவன் என கூறியுள்ளார்.

Neverland Ranch - இல் 1988 முதல் 2003 வரை ஜாக்சன் வாழ்ந்தார். இதனை அடிப்படையாக வைத்து ஆவணப்படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்