உறைந்த ஏரிக்குள் சிக்கிய நாய்க்குட்டி: ஒரு பொலிசாரின் நெகிழ்ச்சி போராட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

துருக்கியில் உறைந்த ஏரிக்குள் சிக்கிய நாய்க்குட்டியை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய பொலிசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கிழக்கு துருக்கியில் உள்ள வேன் ஏரியானது கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து பனிக்கட்டியாகவே உருமாறியுள்ளது.

இந்நிலையில் அந்த ஏரியில் நாய்க்குட்டி ஒன்று சிக்கி தவித்துள்ளது. ஏரி முழுவதும் உறைந்துவிட்டால் அந்த நாய்க்குட்டியால் நகரக்கூட முடியவில்லை.

ஒரு பெரிய ஐஸ்கட்டிக்குள் சிக்கிய அந்த நாய்க்குட்டி குளிரால் உறைய தொடங்கியது. நாய்க்குட்டியைக் கண்ட துருக்கி பொலிஸ் புராக் ஓக்டேன், தன் உயிரையும் பணயம் வைத்து அந்த நாய்க்குட்டியை காப்பாற்றியுள்ளார்.

தன்னுடைய கைகளால் பனிபாறைகளை உடைத்த ஓக்டேன், நடுங்கும் குளிரில் நாய்க்குட்டியை காப்பாற்றி கரை சேர்ந்துள்ளார்.

அங்கு தயாராக இருந்த கால்நடை மருத்துவர்கள் குளிரில் உறைந்த நாய்க்குட்டிக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று கிசிச்சை அளித்தனர்.

தொடர் சிகிச்சை காரணமாக அந்த நாய்க்குட்டி உயிர் பிழைத்துள்ளது.

காவலர் ஓக்டேன், நாய்க்குட்டியை காப்பாற்றியது மட்டுமல்லாமல் அந்த நாய்க்குட்டியை தத்தெடுத்து அதற்கு 'பிஸ்' என்றும் பெயரிட்டுள்ளார்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நாய்க்குட்டியை காப்பாற்றிய காவலரின் வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இது குறித்து பேசிய ஓக்டேன், கடைசி தருணத்தில் நான் அந்த அரிய செயலை செய்து முடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்