தீய ஆவிகள் என்ற பெயரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவில் திருமணத்திற்கு முன்னதாக மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகள் விரட்டப்படும் சடங்கு என்ற பெயரில் மணமகனை அடித்து உதைத்துள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

Ai Guangtao என்ற 24 வயது நபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சீனாவில் ஒரு பகுதியினர் திருமணத்திற்கு முன்னர் மணமகனின் உடலில் உள்ள தீய ஆவிகளை விரட்ட வேண்டும் என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு மணமகன் Ai Guangtao இன் உடலை மைகளை தெளித்தும், முட்டைகளை அடித்தும், கயிறு மற்றும் மூங்கில் தடிகளால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

வலி பொறுக்க முடியாத மணமகன் தலைதெறிக்க ஓடியும் அவரை விடவில்லை. இதில் நிலைகுலைந்து போன மணமகனை ஒரு சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை முடித்து வீடு திரும்பிய மணமகன் சில நாட்கள் கழித்து தனிப்பட்ட முறையில் திருமணம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers