பதவியேற்ற சில மணிநேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்! பரபரப்பு சம்பவம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் பதவியேற்ற சில மணிநேரங்களில் மேயர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர், கடந்த 1ஆம் திகதி பதவி ஏற்றார். அதன் பின்னர் சில மணிநேரங்களில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது மர்ம நபர் ஒருவர், மேயரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். அத்துடன் இந்த தாக்குதலில் மேயருடன் சேர்த்து 4 பேர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மேயர் மரணமடைந்தார். அதன் பின்னர் மறுநாள் படுகாயமடைந்த மற்றொரு நபரும் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஒசாகா மாகாண கவர்னர் அலெஜாண்டோ முராட் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மேயர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அபார்சியோவின் குடும்பத்திற்கும் டிலாக்சியாகோ நகர மக்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 175 அரசியல்வாதிகள் மெக்சிகோவில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்