37 பேரை பலிவாங்கிய கட்டிட விபத்து! உயிருடன் மீட்கப்பட்ட 11 மாத குழந்தை- நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்

கியாஸ் கசிவினால் ஏற்பட்ட ரஷிய கட்டிட விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்த நிலையில் 11 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பில், இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் விபத்து நடந்தது.

37 பேர் உயிர் பலி வாங்கிய ரஷிய கட்டிட விபத்தில் தொடர்ந்து மீட்பு குழுவினர் தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உடைந்த பகுதிகளை அகற்றி இறந்தவர்களின் உடலை மீட்கும் பணிகளில் இருந்த மீட்பு குழுவினருக்கு, குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. உடனே விரைந்த அந்த பகுதியை அகற்றினர்.

இந்நிலையில் அங்கு ஒரு 11 மாத குழந்தை ஒன்று இருப்பதை கண்டனர். அந்த குழந்தையை மீட்டு ஆடையை மாற்றி ஒரு போர்வையால் முடியவாறு ஆம்புலன்ஸ் நோக்கி ஓடும் காட்சி வெளியாகி உள்ளது.

மருத்துவமனை தரப்பில் குழந்தையின் தலை பகுதியில் அடிபட்டுள்ளது என்றும். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் தாய் தனது 3வயது குழந்தையுடன் விபத்திலிருந்து தப்பி உள்ளார். அவர் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு வந்து தனது குழந்தையை கண்டு ஆறுதல் அடைந்தார்.

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டின் விபத்து நடந்த கட்டிடத்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers