11 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: சீனாவை உலுக்கிய சம்பவத்தில் அதிரடி தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சீனாவில் 11 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Gao Chengyong என்ற நபர் சீன ஊடகங்களால் Jack the Ripper என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

குறித்த நபருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நபர் கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை 11 கொலைகள் செய்துள்ளார்.

தனியாக இருக்கும் இளம்பெண்களை குறிவைத்து அவர்களை கடத்திய பாலியல் வன்கொடுமை செய்வார். அதன் பின்னர் அப்பெண்களை தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

1988 ஆம் ஆண்டு 23 வயது இளம்பெண்ணை இவர் முதல் முறையாக உடலை அறுத்து கொலை செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து கொலைகள் செய்து வந்துள்ளார்.11 பெண்களில் 8 வயது சிறுமியும் அடங்குவார்.

இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த நபரின் டிஎன்ஏ மூலம் அவரை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் பெரும்பாலும் மரணதண்டனைகள் lethal ஊசி மூலம் நிறைவேற்றப்படும் என்பதால் இவருக்கும் அதே முறையில் தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers