14 வயதில் மலர்ந்த காதல் ... 24 வருடம் கழித்து விவாகரத்து: பிரிந்தும் கணவனுக்கு சிறுநீரகத்தை தானம் செய்த மனைவியின் நெகிழ்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது முன்னாள் கணவனுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.

Mary Zeigler - Bill Henrichs ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். 14 வயதில் காதலர்களாக மாறிய இவர்கள் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டனர்.

சுமார், 24 வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு ஆதாரமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டு, வேறு ஒரு மணவாழ்க்கையை அமைத்துக்கொணடனர்.

விவாகரத்துக்கு பிறகு சந்தித்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் கணவர் Bill Henrichs சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதனை அறிந்த முதல் மனைவியான Mary Zeigler தனது சிறுநீரகத்தில் ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்