இளம்பெண்ணை கொன்று 11 துண்டுகளாக வெட்டிய இளைஞர்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் தோழியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆத்திரத்தில் கொலை செய்த இளைஞன், உடலை துண்டு துண்டாக வெட்டி மறைவு செய்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிரவைக்கும் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில், குறித்த இளைஞர் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடியிருப்பில் இருந்து இரண்டு பெட்டிகளை லிஃப்ட் வழியாக எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

அதில், கொல்லப்பட்ட 26 வயது இளம்பெண்ணின் உடல் பாகங்கள் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சீனாவின் Quanzhou மாகாணத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சில்லிட வைக்கும் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாங் என்ற 26 வயது பெண்மணியும் Sun met என்ற இளைஞரும் Quanzhou மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். பிப்ரவரி 8 ஆம் திகதி சுமார் 10.20 மணிக்கு வாங் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு பணம் கடன் வாங்க சென்ற இளைஞர் சன், அன்று இரவு அங்கேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் இருவரும் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் அடுத்த நாள் இரவு வாங் குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் அதை சன் தடுக்கவும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் வாங்கை சன் எட்டித் தள்ளியுள்ளார்.

அதில் தலையில் காயமுற்ற வாங் படுகாயத்துடன் சரிந்துள்ளார். இந்த நிலையில் சன் கழுத்தை நெரித்து வாங்கை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சமையல் கத்தியை பயன்படுத்தி வாங்கின் உடலை 11 துண்டுகளாக வெட்டி இரண்டு பெட்டிகளில் நிரப்பியுள்ளார் சன்.

பின்னர் பிப்ரவரி 11 ஆம் திகதி சடலத்தை வெளியே எடுத்துச் சென்று மறைவு செய்துள்ளார். சன் திட்டமிட்டு கொலை செய்துள்ளது விசாரணையில் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers