7 அகதி ஆண்களால் உடலளவில் எனக்கு நேர்ந்த கொடுமை: 10 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பின்லாந்து நாட்டில் 10 வயது சிறுமியை 10 அகதிகள் சேர்ந்து சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்தின் Oulu நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 10 வயது சிறுமி ஒன்லைன் மூலம் இந்த நபர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

பின்னணியில் நடக்கும் பிரச்சனைகளை அறியாத இந்த சிறுமி, தன்னுடன் பேசிய 20 வயது ஆணுடன் சாதாரணமாக பேசி வந்துள்ளார்.

குறித்த ஆண், அந்த சிறுமியை தனது வீட்டுக்கு வரவழைத்து ஆரம்பத்தில் பேசியுள்ளார், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நபர், தன்னுடன் மேலும் 6 ஆண்களையும் இணைத்துக்கொண்டார்.

அவர்களின் வயது 20 முதல் 40 வயது ஆகும். மொத்தம் 7 ஆண்கள் சேர்ந்து 10 வயது சிறுமியை சில மாதங்களாக வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சிறுமியும் இதுகுறித்து வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த ஆண்கள் வசித்து வந்த வீட்டினை சோதனை செய்ததில், இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மேலே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சிறுமி வாக்குமூலமாக அளித்துள்ளார்.

தான், உடலளவில் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், 7 பேரும் அகதிகள் என்றும் இவர்கள் nice, alcohol ஆகிய code Words பயன்படுத்தி இதுபோன்ற அக்கிரமங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து பிரதமர், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும், இது ஏற்றுக்கொள்ளமுடியாத, பேய்கள் செய்யும் செயல் என கூறியுள்ளார்.

மேலும், குழந்தைகள் சமூகலைதளங்களை பயன்படுத்தும்போது, பெற்றோர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருக்ககூடாது, அதில் கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

பின்லாந்தில் 5.5 மில்லியன் தொகை கொண்ட மக்கள் தொகையில் 321,500 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். மேலும், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை குறைந்த அளவிலேயே பின்லாந்து தனது நாட்டிற்குள் அனுமதிக்கிறது.

கடந்த ஆண்டு, 31,797 பேர் பின்லாந்து நாட்டுக்கு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்