உன்னை துண்டு துண்டாக வெட்டிவிடுவோம்: உலகளவில் பிரபலமான சிறுவனை தேடும் பயங்கரவாதிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கடந்த 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் பை அணிந்தபடியே உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சிறுவனை துண்டு துண்டாக வெட்டுவதற்கு தலிபான் தீவிரவாதிகள் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த முர்டாஸா அஹ்மடி என்ற சிறுவன் கடந்த 2016ம் ஆண்டு பிளாஸ்டிக் பை அணிந்தபடி கால்பந்து விளையாடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது.

அந்த பையில் பார்சிலோனாவை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

இந்த புகைப்படம் உலக ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததை அடுத்து, மெஸ்ஸியை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு சிறுவனுக்கு கிடைத்தது.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற போட்டியின் போது, மெஸ்ஸியின் கையை பிடித்தவாறே சிறுவன் மைதானத்திற்குள் சென்றான்.

பின்னர் மெஸ்ஸி, தாய் கையெழுத்திட்ட ஒரு பனியன் மாறும் கால்பந்து ஒன்றினை சிறுவனுக்கு பரிசாக கொடுத்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பான பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறுவனும் சிக்கியுள்ளான். இந்த தாக்குதலில் முர்டாஸாவின் தென்கிழக்கு கஸ்னி மாகாணத்தில் இருந்த வீடும் சிதைந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாய், நாங்கள் துப்பாக்கி சத்தம் கேட்க ஆரம்பித்ததும், எங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்து தப்பி வந்துவிட்டோம். உடமைகளைக்கூட எடுத்துவரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தலிபான்கள் தன்னுடைய மகனை துண்டு துண்டாக வெட்டி விட தேடிக்கொண்டிருப்பதாகவும், அவனை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் மெஸ்ஸியிடம் இருந்து பெற்ற பணத்தை எங்களிடம் கொடுத்துவிடு என உள்ளூர் பணக்காரர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்