மனிதர்கள் போரடிக்கிறார்கள், தேவதைகளுடன் உறவு கொள்கிறேன்: இளம்பெண்ணின் பகீர் தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது, அதனால்தான் சிறு தேவதைகளை விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்.

சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு இளம்பெண், தான் ஆண் தேவதைகளுடன் உறவு கொள்வதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

ஐஸ்லாந்தைச் சேர்ந்த Hallgerdur Hallgrimsdottir என்னும் இளம்பெண், சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்.

அவை மென்மையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் உடல் கொண்டவை என்று கூறும் Hallgerdur, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் குணமுடையவை சிறு தேவதைகள் என்கிறார்.

Alfar என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறு தேவதைகள் ஐஸ்லாந்து இலக்கியத்தில் கி.பி 1000 வாக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பல ஐஸ்லாந்துக்காரர்கள் இன்னும் சிறு தேவதைகள் இருப்பதாக நம்புகிறார்கள். 2013ஆம் ஆண்டு, ஐஸ்லாந்தின் தலைநகரான Reykjavík அருகிலிருந்து, சிறு தேவதைகள் வாழும் இடத்திற்கு பாதை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்றதாக பிரபல பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த Ragnhildur Jónsdóttir என்பவர், அந்த பாதை சிறு தேவதைகளின் குடியிருப்பை தொந்தரவு செய்யும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான ஒரு நிகழ்ச்சியில், 54 சதவிகிதம் ஐஸ்லாந்து நாட்டினர் சிறு தேவதைகள் இருப்பதை நம்புவதாகவும், சிலர் அவை மனிதர்கள் போலிருப்பதாகவும், வேறு சிலரோ, அவை 36 இஞ்ச் உயரம் இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணப்பெண் சிறு தேவதைகள் மீதுள்ள அதீத விருப்பத்தால், அவற்றை போலவே தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக 1000 பவுண்டுகள் செலவளித்து, தன் காதுகளை சிறு தேவதைகளின் காதுகள் போல அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்