ரஷ்ய அதிபருக்கு ஒரு ரகசிய மகள்? திடுக்கிடும் தகவல்களும் அபூர்வ புகைப்படங்களும்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இரண்டாவதாக ஒரு மகள் இருப்பதாக அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாவதுண்டு, ஆனால் புடின் ஒருபோதும் தனக்கு அப்படி ஒரு மகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில்லை.

புடினுக்கும் அவரது மனைவியான Lyudmila Shkrebnevaவுக்கும் Mariya Putina என்னும் ஒரு மகள் இருப்பது பலரும் அறிந்ததே.

ஆனால் அவருக்கு Yekaterina Putina என்று இன்னொரு மகள் இருப்பதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகும்.

இப்போது பிரச்சினை அதுவல்ல, புடினின் அந்த ரகசிய மகளான Yekaterinaவை திருமணம் செய்திருந்த Kirill Shamalov (36) என்னும் ரஷ்யாவில் இளம் கோடீஸ்வரர் அவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Kirill, Yekaterinaவை விவாகரத்து செய்து விட்டு முன்னாள் லண்டன் வாழ் காதலியான அழகி Zhanna Volkovaவை திருமணம் செய்து கொண்டுள்ளார் என மாஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.

புடினின் மருமகன் என்பதால் மேற்கத்திய நாடுகளால் பல தடைகள் விதிக்கப்பட்டிருந்த Kirillஇடம் அவரது புதிய வாழ்க்கை பற்றி கேட்டபோது, அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அருமையாக நடனமாடும் Yekaterinaவை எதனால் Kirill விவாகரத்து செய்துவிட்டு Zhannaவை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

ஆனாலும் Kirillக்கு ரொம்ப தைரியம்தான், புடின் மகளையே விவாகரத்து செய்து விட்டாரே என்று கூறியுள்ளார் ஒரு விமர்சகர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers