நடுவானில் பரிதாபமாக உயிரிழந்த பெண்: சோகத்தில் முடிந்த விமான பயணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலிருந்து மகச்கலா நகர் நோக்கி Aeroflot நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இது குறித்து Aeroflot விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் இருந்த பெண்ணுக்கு கடுமையான நீரிழிவு நோய் இருந்துள்ளது.

இதையடுத்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை பொலிசாரிடம் தான் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து பொலிசார் விரைவில் அறிக்கையை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்