குடியிருப்பை விட்டு இளம்பெண்கள் வெளியே வர வேண்டாம்: நகர நிர்வாகம் வெளியிட்ட பகீர் உத்தரவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் குழந்தை முகம் கொண்ட கொலைகாரன் நடமாடுவதாகவும், பெண்களை மட்டும் குறிவைத்து தாக்குவதால் எச்சரிக்கையுடன் இருக்க நகர நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே பல பெண்களை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளதாகவும், அதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Toliyatti நகர மக்கள் குறித்த எச்சரிக்கையால் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

சாலையில் பொலிசாரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இளம்பெண்கள் கண்டிப்பாக தனியாக வெளியே நடமாட வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

Artem Semyonov என பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த 22 வயது இளைஞர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூவரை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உள்ளூர் மக்கள் 10 மேற்பட்டவர்கள் இதுவரை அந்த நபரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்