மொடலிங் ஆசையால் நடைப்பிணமாகி உயிருக்கு போராடும் இரு இளம்பெண்கள்: அதிர்ச்சி புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மொடலிங் ஆசையால் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

14 வயது இரட்டையர்களான Daria Ledeneva மற்றும் Maria Ledeneva இருவரும், மொடலிங் ஆசையால் மொடலிங் ஏஜன்சி ஒன்றில் சேர்ந்தார்கள்.

அந்த ஏஜன்சியினர், இளம்பெண்கள் இருவரும் தங்கள் கன்ன எலும்புகள் தெரியும் அளவுக்கு உடல் இளைக்க வேண்டும் என்று கூறிவிட, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள் அவர்கள்.

வெறும் ஒரு கட்லெட், இரண்டு ஸ்பூன் உணவு என்னும் அளவில் அவர்கள் உணவு குறைந்தது.

ஃபேஷன் ஷோ ஒன்றில் கேட் வாக் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் இருவரும் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் இருவரும், anorexia என்னும் பிரச்சினையால் அவதியுறுவதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இருவருக்கும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், Daria கோமா நிலைக்கு சென்றாள். மூன்று நாட்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஆனால் ஒரு மாதமான பிறகும் அந்த இரட்டையர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படாததால், மீண்டும் அவர்கள் மாஸ்கோவிலுள்ள ஒரு சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் இதயம் எந்த நேரம் வேண்டுமானாலும் நின்று விடும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்