அமெரிக்க அழகியை கொன்ற கொலைகாரன் சிக்கினான்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது உறவினருடன் கோஸ்டா ரிக்கா நாட்டுக்கு சென்ற ஒரு அமெரிக்கப் பெண் காணாமல் போன நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தது மோப்ப நாய்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

Venezuelaவில் பிறந்து பின்னர் மியாமிக்கு குடி பெயர்ந்த Carla Stefaniak (36) கோஸ்டா ரிக்காவுக்கு தனது பிறந்த நாளைக் கொண்டாட சென்ற இடத்தில் மாயமானார்.

தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார் மோப்ப நாய்கள் உதவியுடன் Stefaniak தங்கியிருந்த ஹோட்டலுக்கு பின்னல் உள்ள ஒரு பாறைகள் நிறைந்த இடத்தில் ஒரு இளம்பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தனர்.

அந்த உடல் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்டு பாதி மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உடல் Stefaniakஉடையதுதானா என்பதை அறிய பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் அது Stefaniakஇன் உடல்தான் என்பதை உறுதி செய்ததோடு, அவர் கழுத்துல் கத்தியால் குத்தப்பட்டிருந்ததையும் தலையில் ஏதோ ஒரு கனமான பொருளால் தாக்கப்படிருந்ததையும் அறிந்து கொண்டனர்.

ஹோட்டலில் ஆய்வு நடத்தியபோது Stefaniak தங்கியிருந்த அறையில் இரத்தக்கறை காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் காரில் புறப்பட்டுச் சென்றதை பார்த்ததாக ஹோட்டல் ஊழியர்கள் சிலர் கூறியிருந்த நிலையில், ஹோட்டலின் பின்புறத்திலேயே அவரது உடல் கிடைத்தது சந்தேகத்தை ஏற்படுத்த, ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை விசாரிக்கத் தொடங்கினர் பொலிசார்.

Stefaniak தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த Bismarck Espinosa Martinez (32) என்னும் நிக்கராகுவா நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை விசாரித்தபோது அவரது வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதைக கண்ட பொலிசார் அவரை கைது செய்தனர்.

காவலில் அடைக்கப்பட்ட அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்