இரண்டு மாதத்தில் மோசமாக மாறிய பெண்ணின் அழகிய தோற்றம்! திடீரென பிரிந்த உயிர்- கலங்கவைக்கும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிரபல மொடலான ஜெஹீல் ஸ்டெர்ஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு அழகு தேவதையாக வலம் வந்த ஜெஹீலின் தோற்றம் கடந்த இரண்டு மாதங்களாக கோரமாக மாற தொடங்கியது.

இதற்கு காரணம் புற்றுநோய் தான். இது குறித்து ஜெஹீல் கடந்த அக்டோபர் 4 ஆம் திகதி வெளியிட்ட பேஸ்புக் பதிவில், மார்பக புற்றுநோயால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

என் உடல் முழுவதும் நோய் பரவியுள்ள நிலையில் இதை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

நான் இறக்க விரும்பவில்லை, கடந்த 2013-ல் நடந்த அற்புதம் போன்று மீண்டும் நடக்க விரும்புகிறேன் என பதிவிட்டார்.

இந்நிலையில் இந்த பதிவை வெளியிட்ட சரியாக 2 மாதங்கள் கழித்து நேற்று 4-ஆம் திகதி ஜெஹீல் உயிரிழந்தார்.

இந்நிலையில் அழகு பதுமையாக ஜொலித்த ஜெஹீஸின் தோற்றம் இரண்டு மாதங்களில் மிக மோசமாக மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்