பள்ளி நிர்வாகத்தால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட இரட்டையர்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பள்ளி நிர்வாகத்தின் பேச்சை கேட்டு உடல் எடையை குறைத்த இரட்டை சகோதரிகள் தற்போது உயிருக்கு போராடி வரும் வேளையில், அவர்களுக்கு உதவி கேட்டு தாய் கண்ணீருடன் கெஞ்சி வருகிறார்.

ரஷ்யாவை சேர்ந்த மாஷா மற்றும் டாஸா என்ற 14 வயது இரட்டை சகோதரிகள், மொடலிங் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இருவரும் 50 கிலோ உடல் எடையில் இருந்ததால், எடையை குறைத்து 40 கிலோவிற்கு வந்தால் பார்க்க அழகாக இருக்கும். லேசாக எலும்பு தெரிந்தால் தான் மொடலிங்கில் நிறைய சாதிக்கலாம் என பள்ளி நிர்வாகம் ஆசை வார்த்தை கூறியுள்ளது.

அதன்படி உடல் எடையை குறைக்க முடிவு செய்த இரட்டையர்கள், தினமும் மாலை 5 மணிக்கு மேல் சாப்பிடாமல் வேகவைத்த உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மாஷா ஏற்கனவே அதிகமான உடல் எடையில் இருந்ததால், 40 கிலோவிற்கு குறைந்துள்ளது. ஆனால் அவளுடைய சகோதரி டாஸாவின் உடல் எடை 36 கிலோவிற்கு மிகவும் குறைந்துள்ளது.

உடல் எடை குறைந்த நேரத்தில் இருவரும் அபாயகட்டத்தை நெருங்க ஆரம்பித்தனர். உடனே வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இறந்துவிடலாம் என எச்சரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அவர்களுடைய தாய் செய்த வேலையை விட்டு, மகள்களுக்காக அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். மேலும், அவர்களை எந்த மருத்துவர்களும் மருத்துவனையில் சேர்த்துக்கொள்ள மறுப்பு தெரிவித்து வருவதால், இருமகள்களையும் வீட்டில் வைத்தே பார்த்துக்கொள்கிறார்.

இதில் தற்போது மாஷா எழுந்து நிற்கும் அளவிற்கு தேறிவிட்டார். ஆனால் அவருடைய சகோதரி டாஸா தலையை கூட நிமிர்த்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

இவர்கள் இருவரையும் நேரில் பார்த்த முன்னாள் மொடல் அழகியும், தற்போது அனோரெக்சியா நோயில் இருந்து மீண்டவருமான மரியா கோக்னோ, யாரேனும் உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருந்தால் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அவர்கள் இருவரும் தற்போது வாழும் சடலங்களாக வீட்டில் இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers