அடுத்தடுத்து கொத்துக் கொத்தாக இறந்த குருவிகள்! காரணம் என்ன?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையின் போது, அப்பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் மடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் மற்றும் செல்போன் டவர்களின் மூலமாக வெளிவரும் கதிர்வீச்சினால் பறவைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கதிர்வீச்சு பாதிப்பால் சிட்டுக் குருவிகளின் இதயம் பலவீனமடைந்து இறப்பதாக விஞ்ஞானிகளும் தெரிவித்திருந்தனர்.

இந்த கதிர்வீச்சுக்களின் அளவு அதிகரிக்கும்போது பிற உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், 5ஜி எனும் தொழில்நுட்பத்திற்கான சோதனை நெதர்லாந்து நாட்டில் நடத்தப்பட்டது.

ஹேக் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, அருகில் உள்ள ஹூகைன்ஸ் எனும் பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தன.

இதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்ப சோதனை தான் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த தொழில்நுட்பமானது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கதிர்வீச்சினை வெளியிடும்.

இதனால் ஏற்பட்ட பாதிப்பால் இந்த பறவைகள் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இச்சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 4ஜி தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ள நிலையில், அதிவேகமான மற்றும் துல்லியமான இணைய சேவையைப் பெற 5ஜி தொழில்நுட்ப சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers