முருகனும், இயேசுவும் நேருக்குநேர் சந்தித்தால் என்ன நடக்கும் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்துக்கடவுள் முருகனும், கிறிஸ்தவ கடவுள் இயேசுவும் நேருக்குநேர் சந்திக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீப நாட்களகாவே இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ மலேசியாவில் எடுக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில், இந்துக்கடவுள் முருகன் ஒரு தேரிலும், அதற்கு எதிர்திசையில் கிறிஸ்தவ கடவுள் இயேசு ஒரு தேரிலும் வருகின்றனர்.

ஒரு தெருவில் எதிரெதிர் திசையில் இருவரும் சந்திக்கும்பொழுது, தேரை அப்படியே நிறுத்திய பக்தர்கள் கடவுளுக்கு மாலையை மாற்றி அணிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

அதனை தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த நண்பர்கள் சிலர் கிறிஸ்தவ கடவுளை வணங்குகின்றனர்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இதனை நடிகர் பிரசன்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மலேசிய நாட்டில் 61.3 சதவிகிதம் முஸ்லிம் மக்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் நாட்டில், இந்த சம்பவம் நடந்துள்ளது மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு அடையாளம் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers