அறுவை சிகிச்சையின் போது 8 மணிநேரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை, மருத்துவமனை ஊழியர்கள் சேர்ந்து 8 மணிநேரமாக துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மூலநோய் காரணமாக, லாகூரில் உள்ள சர்வீஸ் மருத்துவமனைக்கு 23-ம் தேதியன்று சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலை 7.30மணிக்கு அவர் ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், மாலை 7 மணிக்கு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிற்கு திடீரென அடி வயிறும், சிறுநீரக பாதையிலும் வலி எடுக்க ஆரம்பித்துள்ளது. இதை பற்றி தன்னுடைய சகோதரியிடம் கூறியதும், அவர் ஷேக் ஸாயத் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்,ஷாட்கான் பொலிஸ் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் கொடுத்தார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பெண்ணின் பரிசோதனை மாதிரிகளை கொண்டு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் யாஸ்மின் ரஷிட், திங்களன்று மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவொன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்