75 வயதிலும் திருமண ஆசை: 28 வயது பெண்ணுடனான காதல் மயக்கத்தில் கோடி பணத்தை இழந்த 75 வயது காதலன்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவை சேர்ந்த பல் மருத்துவர் Simon Frost (75) என்பவர் இணையதளம் வாயிலாக உண்மையான காதலியை தேடியதன் விளைவாக பணத்தினை இழந்துள்ளார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர், தான் சம்பாதித்த பணத்தினை சேமித்து வைத்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்னர், இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், அன்றிலிருந்து இன்று வரை உண்மையான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஆப்பிரிக்காவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணுடன் தொடர்ந்து பேசிவந்துள்ளார். இந்நிலையில், நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என அப்பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அப்பெண் கூறுவது உண்மை என நம்பி தனது மனதுக்குள் ஆசை வளர்த்துள்ளார் முதியவர். இந்நிலையில்தான், தனது தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி பணம் கேட்டுள்ளார்.

இதனை நம்பி முதியவரும், கோடிக்கணக்கான பணத்தை டிரான்ஸ்பர் செய்துள்ளார். காலப்போக்கில் அப்பெண் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.

மேலும், அப்பெண் அனுப்பி வைத்தது, அமெரிக்க ஆபாச பட நடிகையின் புகைப்படம் என பின்னர்தான் தெரியவந்தது. இதுகுறித்து இந்த முதியவர் கூறியதாவது, எனது வாழ்க்கையில் ஏன் இப்படி விளையாடுகிறார்கள் என தெரியவில்லை.

எனது காதல் உண்மையானது. நான் இன்னும் உண்மையான துணையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers