கரையொதுங்கிய 145 திமிங்கலங்கள்: நியூஸிலாந்து கடற்கரையில் பரிதாபம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நியூஸிலாந்து கடற்கரை ஒன்றில் 145 திமிங்கலங்கள் கரையொதுங்கிய சம்பவம் இயற்கை ஆர்வலர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Stewart Island பகுதியில் உள்ள Masons Bayஇல் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

நடைபயணம் மேற்கொண்ட ஒருவர் Mason Bay பகுதியில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கிக் கிடப்பதைக் கண்டு விலங்குகள் நலத் துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து பார்க்கும்போது பாதி திமிங்கலங்கள் இறந்திருந்தன.

அவற்றை மீண்டும் வெற்றிகரமாக கடலுக்குள் கொண்டு சேர்ப்பது கடினம் என்று கூறியுள்ள அவர்கள், அவற்றை கருணைக் கொலை செய்வதுதான் அவைகளுக்கு செய்யும் ஒரே உதவி என்று தெரிவித்தனர்.

நியூஸிலாந்து பகுதியில் இதுபோல் திமிங்கலங்கள் கரையொதுங்குவது இது நான்காவது முறையாகும்.

இந்நிலையில் ஏன் இவ்வாறு அவை கரையொதுங்குகின்றன என்னும் கேள்விக்கு இதுவரை அறிவியலாளர்களால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers