13 ஆண்டுகளாக தந்தையால் துஷ்பிரயோகம்! தொடர் கருக்கலைப்பு: தைரியமாக புகைப்படத்தை வெளியிட்ட பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணை அவர் தந்தை 13 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த நிலையில், தந்தைக்கு தண்டனை வாங்கிதர அவர் போராடி வருகிறார்.

கடீரா (23) என்ற இளம் பெண்ணை அவரின் தந்தை கடந்த 13 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதன் விளைவாக தொடர்ந்து சில முறை கருக்கலைப்பு செய்த கடீரா இரண்டு முறை கருக்கலைப்பு செய்யமுடியாமல் இரு குழந்தைகளையும் பெற்றார்.

பின்னர் தைரியமாக தந்தையை எதிர்க்க முடிவெடுத்த கடீரா தனது தாயுடன் சேர்ந்து தந்தைக்கு தண்டனை வாங்கி தர போராடி வருகிறார்.

அந்நாட்டில் அதிகளவு நீதித்துறையில் ஊழல் நடப்பதால் கடீராவால் நினைத்ததை செய்யமுடியவில்லை.

மேலும், கடீராவின் மாமா மற்றும் இதர உறவினர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனால் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் கடீரா.

கடீராவின் நிலை பல ஊடகங்களில் வந்த நிலையில் அவரின் வாழ்க்கையை இயக்குனர் சஹரா மணி என்பவர் திரைப்படமாக எடுக்கிறார்.

இது குறித்து கடீரா கூறுகையில், என் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும், என் தந்தைக்கு சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன்.

நான் சந்திப்பது போன்ற பிரச்சனையை ஆயிரமாயிரம் பெண்கள் சந்திக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்