#MeToo-ஐ பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்த நாடு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய நாடான சுவீடனில் உள்ள பள்ளி ஒன்றில், பாலியல் சீண்டலுக்கு எதிரான #MeToo இயக்கம் நவீன பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டன் மீது நடிகை பலர் பாலியல் புகார் கூறினர். இதனை அவர்கள் #MeToo எனும் இயக்கத்தின் மூலமாக சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் பலர், #MeToo எனும் ஹேஷ்டாக்கை பதிவிட்டு தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரியப்படுத்தினர். அதன் பின்னர் இவ்விவகாரம் உலகம் முழுவதும் பரவியது.

இந்நிலையில், சுவீடன் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் நவீன பாடமாக #MeToo சேர்க்கப்பட்டுள்ளது. 15 வயதுடைய மாணவர்கள் இரண்டு மணிநேரம் இதற்கான வகுப்பில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறை மட்டுமின்றி பல இடங்களிலும் பாலியல் சீண்டல் உள்ளதால், மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே இதுகுறித்த விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதற்காக இது பாடமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பள்ளியின் குடியியல் ஆசிரியை அன்னா கரின் நில்சன் கூறுகையில், ‘அவர்களுக்கு (மாணவர்களுக்கு) ஏற்கனவே #MeToo குறித்து ஓரளவு தெரிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இது அவர்களுக்கும் பொருந்தும் என்பதாகும்.

ஆண் ஆசிரியர்களில் தங்களை ஆண்களாக காட்டிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் தாங்கள் குற்றஞ்சாட்டப்படுவதாக, அவர்கள் நினைப்பதில்லை. மேலும், நாம் அதற்கு பதிலாக ஒரு சமமான சமுதாயம் எப்படி பேச வேண்டும் என்பதை உணர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...