சிறுமியாக பார்த்த தோழியை தேடிய இளம்பெண்: 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த அதிசயம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் பழகிய தோழியை டுவிட்டர் மூலம் தற்போது கண்டுப்பிடித்துள்ளார்.

பிரியனா என்ற இளம்பெண் இரு தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் தான் சிறுமியாக இருக்கும் புகைப்படத்தையும் தன்னுடன் இன்னொரு சிறுமி அருகில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

அதில், கடந்த 2006-ல் என்னுடன் கப்பலில் பயணித்த இந்த சிறுமியும் நானும் அன்று ஒரு இரவு நெருங்கிய தோழிகளாக இருந்தோம்.

அவளை தற்போது கண்டுப்பிடித்து தர உதவ வேண்டும் என பதிவிட்டார்.

இந்த பதிவானது மிக வைரலான நிலையில் பல ஆயிரம் பேர் அதை ஷேர் செய்தார்கள்.

இதையடுத்து பிரியனா தேடி வந்த ஹைதி என்ற பெண் தன்னுடைய டுவிட்டரில் அந்த பதிவை பார்த்த நிலையில், நீங்கள் என்னை தான் தேடுகிறீர்கள் என கேள்விப்பட்டேன் என புகைப்படத்துடன் பதில் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாக பேசி கொண்டனர்.

டுவிட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இருவரின் பதிவுகளும் டுவிட்டரில் மிக பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் உணர்ச்சிகரமாக அவர்களின் நட்பை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்