பிறப்புறுப்பு சிதைப்பை முற்றிலும் ஒழித்த நாடு

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்க நாடுகளில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற சடங்குகளில் ஒன்று தான் பிறப்புறுப்பு சிதைவு.

இது பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது வழக்கமாகும்.

இந்நிலையில் சூடானில் சூடானில் 87% சிறுமிகளின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. அதாவது பிறப்புறுப்பின் வெளிப்பகுதி வெட்டப்பட்டு, யோனியின் துளை தைக்கப்படும்.

தற்போது இந்த சடங்கு சூடானில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருகின்றது.

பிறப்புறுப்பு சிதைப்பு சடங்கிலிருந்து தப்பிய சூடானில் வசிக்கும் ஜைனப் மற்றும் வஹாத் குழந்தையின் குடும்பத்தார் இதுபற்றி மனந்திறந்துள்ளார்.

இது குறித்த அவர்களது கூறுவதாவது,

ஜைனப் மற்றும் குழந்தை வஹாத் பிறப்புறுப்பு சிதைப்பு சடங்கிற்கு உள்ளாக மாட்டார்கள்.

பிறப்புறுப்பு சிதைப்பின் கடுமையான வழிமுறையை பின்பற்றும் சூடானில் இவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இந்த சிறுமிகளின் தாத்தா பாட்டியின் துணிவால் இவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

பிறப்புறுப்பு சிதைப்பதால் இளம் பெண்கள் பாலியல் உணர்வுகள் இல்லாத நிலைக்கு ஆளாகின்றனர்.

எங்கள் மதம் இதனை அனுமதிக்காது, அதனால் நாங்கள் இதனை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தோம்.

சிலர் பிறப்புறுப்பு சிதைக்கப்படவில்லை எனில் உங்கள் மகள்களுக்கு திருமணம் நடக்காது என்றார்கள் மகளை திருமணம் செய்ய முன்வருபவர்களிடம் இதனை சொல்லி விடுவோம் என்று மிரட்டினர்.

மதத் தலைவர்களின் உதவியுடன் அக்கிராமத்தில் பிறப்புறுப்பு சிதைப்பு சடங்கை கைவிட வைத்தனர்.

சிறுமிகள் கடவுள் கொடுத்த இயற்கை உடலுடன் இருப்பார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து $20 மில்லியன் பிரிட்டன் உதவி பெறும் திட்டத்தின் ஒரு பகுதி இது.

தற்போது பிறப்புறுப்பு சிதைப்பு நிலைமை மாறி வருகின்றது என்று உருக்கத்துடன் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers