அந்தமான் தீவில் பரிதாபமாக இறந்த இளைஞன்! உடலை மீட்கச் சென்ற பொலிசாருக்கு ஆதிவாசிகள் கொடுத்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அந்தமான் தீவில் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட அமெரிக்க இளைஞனின் உடலை மீட்கச் சென்ற பொலிசார் அங்கிருந்த மக்களால் துரத்தி அனுப்பப்பட்டுள்ளனர்.

அந்தமானில் இருக்கும் மர்ம தீவான சென்டினல் தீவு மக்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவு ஆகும். இங்கிருக்கும் சென்டினேலீஸ் மக்களுக்கு வெளியுலக மனிதர்களை பிடிக்காது.

இதற்கான காரணமும் என்ன என்பது குறித்து நாம் தெரிவித்திருந்தோம்.

இது போன்ற நிலை இருக்கும் போது தான், கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் என்ற இளைஞன் அங்கிருக்கும் மக்களை பார்க்கச் சென்றார்.

ஆனால் அவரைக் கண்டவுடன் அங்கிருக்கும் சென்டினேலீஸ் மக்கள் அவரை துன்புறுத்தி கொலை செய்துவிட்டனர்.

கொலை செய்யப்பட்ட ஜானின் உடல் இன்னும் அந்த தீவில் இருக்கும் கடற்கரையில் தான் புதைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்பதால், பொலிசார் அந்த உடலை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து நேற்று மாலை பொலிஸ் படை ஒன்று அந்தமான் தீவிற்குள் சென்றது. 2 மீனவர்கள், 4 போலீசார் என்று 6 பேர் கொண்ட படை அந்த தீவிற்கு சென்றுள்ளது. இவர்கள் தங்களிடம் இருந்த ஆயுதங்களை மறைத்து வைத்து, ஆதிவாசிகளிடம் அணுகியுள்ளனர்.

ஆதிவாசிகளுக்கு 300 மீற்றர் தூரத்தில் இருக்கும் போது படகுகளை நிறுத்திவிட்டு, அந்த தீவின் கரையை நோட்டமிட்டுள்ளனர்.

அப்போது, சென்டினேலீஸ் ஆதிவாசிகள், உள்ளே இருந்து வெளியே வந்த ஜானின் சமாதி அருகே நின்றுள்ளனர். ஜானின் சமாதி அருகிலேயே நின்று, பொலிசாரை மிகவும் கோபமாக பார்த்துள்ளனர்.

அதன் பின் பொலிசாரை நோக்கி சத்தமிட்டு, அவர்களை நோக்கி அம்புகளை ஏய்தியுள்ளனர். பொலிசார் தூரத்தில் இருந்த காரணத்தினால், அவர்களின் அம்பு பொலிசாரை தாக்கவில்லை, யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

அங்கிருக்கும் மக்கள் தொடர்ந்து அம்புகளை ஏய்தும், கத்திக் கொண்டு இருந்ததால், தப்பித்தால் போதும் என்று பொலிசார் மீண்டும் திரும்பியுள்ளனர்.

தப்பி வந்த பொலிசார் சென்டினேலீஸ் மக்கள் மிகவும் கோபத்துடன் இருப்பதால் அங்கு இருக்கும் ஜானின் உடலை இரவில் மீட்கலாமா என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers