திருமண மேடையில் மணமகன் செய்த காரியம்: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! வைரலாகும் புகைப்படம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
220Shares

மலேசியாவில் Doraemon கேலிச்சித்திரத்திலான திருமண ஆடையில் வந்து நின்ற மணமகனை பார்த்து உறவினர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரை சேர்ந்த முகமது ஃபிர்ஹாரஸ் முஹ்ட் அலி என்பவருக்கு சிறுவயதில் இருந்தே, கேலிச்சித்திரக் கதாபாத்திரங்களில் ஒன்றான Doraemon மீது அலாதி பிரியம் கொண்டிருந்துள்ளார்.

வீட்டில் உள்ள தன்னுடைய அறை முழுவதும், Doraemon உருவம் பொரித்த பொருட்களையே அதிகம் வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் முகமதுக்கு திருமணம் வந்துள்ளது. திருமணத்தன்று தனக்கு பிடித்தமான Doraemon, உருவம் பொரித்த ஆடை அணிய வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் இதனை பார்த்து மற்றவர்கள் எதுவும் கூறுவார்களோ என்ற தயக்கமும் இருந்துள்ளது. திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய மனைவிக்கு போன் செய்து அனுமதி கேட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தயக்கம் தெரிவித்த அவருடைய மனைவியிடம், "நீ என்னை காதலித்தால் என்னுடைய ஆடை உனக்கு பெரிதாக தெரியாது" என கூறி மனவியின் மனதை மாற்றி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து மிகவும் சந்தோசமாக Doraemon உருவம் பொரித்த ஆடையினையே முகமது, திருமணத்திற்கு அணிந்து வந்துள்ளார். தன்னுடைய மனைவிக்கும் அந்த உருவத்தில் ஒரு ஆடையினை வாங்கி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்து உறவினர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சியடைந்தாலும், மற்றவர்கள் விசித்திரமாக பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்