தோழியிடம் விடுத்த சவாலிற்காக பேய் நகங்களை பெற்ற அழகி! பயந்து ஓடும் பொதுமக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஸ்யாவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக பேய் போன்ற நகங்களை வளர்த்துக்கொண்டு துயரங்களை அனுபவித்து வருகிறார்.

ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த 35 வயதான எலெனா ஷிலென்கோவா, பேய் போன்ற நீளமான நகங்களை 4 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், நான் சிறுவயது முதலே நீளமான நகங்களை வளர்த்து வந்தேன். ஆனால் ஒருமுறை என்னுடைய ஆசிரியை அதனை நறுக்கிவிட்டார்.

என்னுடைய தோழி ஒருத்தி நீளமான நகங்களை என்னால் வளர்க்க முடியாது என என்னிடம் சவால் விடுத்தாள். நான் வளர்த்து காட்டுகிறேன் என கூறி கடந்த 4 வருடம் 3 மாதங்களாக நகங்களை வளர்த்து வருகிறேன்.

இதனால் நான் பெரிய கஷ்டம் எதையும் சந்திக்கவில்லை. ஆனால் எனக்கு பிடித்தமான டென்னிஸ் விளையாட்டு விளையாட முடியவில்லை. கடலில் நீந்துவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நகம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கடலுக்கு செல்வதில்லை.

இரவு நேரங்களில் என்னுடைய நகம் உடைந்துவிட்டதை போல கனவுகள் வரும். நான் உடனே பயந்துபோய் நடு இரவில் எழுந்து சரி செய்வேன்.

ரஷ்யா குளிராக இருக்கும் என்பதால் நான் தெருக்களில் நடந்து செல்லும் போது, அதிகபட்சம், என்னுடைய ஆடைக்குள் தான் கைகளை விட்டுக்கொண்டு செல்வேன்.

ஒரு சில நேரம் என்னுடைய கைகளை பார்த்து பொதுமக்கள் பயந்து ஒதுங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் திட்டுவார்கள், ஒருசிலர் பாராட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நகங்களை வளர்ப்பதால் நான் ஆண்களை கவர வேண்டுமென நினைத்ததில்லை. என்னை யாரவது ஒருமுறை பார்த்தல் வாழ்நாளில் மறக்க கூடாது என்பதற்காகவே வளர்த்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்