அந்தமானில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம்: ஆதிவாசிகளுக்கு இப்படி பதிலடி கொடுக்க கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அந்தமானில் அமெரிக்க இளைஞரை அம்பு எய்து கொன்ற சென்டினல் ஆதிவாசிகள் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

தெற்கு அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வாழும் பழங்குடிகள் வெளி உலக தொடர்பின்றி, வெளி உலக மக்களை பார்க்க விரும்பாமல் வாழ்கின்றனர். அது, பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதோடு, அங்கு வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த ஜான் ஆலன் சாவ் என்பவர், சென்டினல் பழங்குடியினரின் அம்புக்கு பலியானார்.

கிறிஸ்துவ மதத்தை பரப்ப ஜான் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்கு இன்னும் ஆதாரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்பு ஒன்று, சென்டினல் பழங்குடியினர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஆனால் அமெரிக்க அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்