காதலி உண்மையாக இருக்கிறாளா? வேறொரு ஆணை அனுப்பிய காதலன்: அதன் பின் நடந்த சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

காதலி உண்மையாக இருக்கிறாளா என்பதை அறிவதற்கு காதலன் நடத்திய சோதனையில் காதலி ஏமாற்றியதால், அந்த நபர் காதலியிடம் சண்டை போட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் யூடியூப் சேனாலான டூ கேட்ச் சீட்டர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த யூ டியூப் சேனலில் காதலன், காதலி, மனைவி, நண்பர்கள் ஆகியோர் உண்மையாக இருக்கிறார்களா என்பதை அறிவிதற்கு உதவுகிறது.

ஆனால் அதுவே சில நேரங்களில் சிலரின் பிரிவுக்கு காரணமாகியும்விடுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் காதலன் ஒருவர் தன் காதலியான ஆலனை சோதிப்பதற்கு அந்த யூ டியூப் சேனலை அனுகியுள்ளார்.

இதையடுத்து காதலி ஒரு காபி ஷாப்பில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வரும் ஒரு நபர் அவரிடம் பேசுகிறார். அவர் குடித்திருக்கும் பானத்தை குடிக்கலாமா என்று கேட்க, அதற்கு அந்த பெண்ணும் சரி என்கிறார்.

அதன் பின் அந்த நபர் போன் நம்பர் கேட்க, உடனே இவரும் கொடுக்க, இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டவுடன், அதிர்ச்சியடைந்த காதலன், அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கத்துகிறார்.

இதைத் தொடர்ந்து இருவரும், ஒரு அறையில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதற்கு முன்பு ஆலனாவின் காதலன் ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். அந்த விவகாரம் காதலிக்கு தெரிந்துள்ளது.

இதனால் இருவருடம் சண்டையிட்டு இறுதியில் மன்னிப்பு கோரி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கொள்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்