புற்றுநோய், கருக்கலைப்பு, உயிர் இழப்பு: தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பிரபல நிறுவனம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென் கொரிய நிறுவனமான சாம்சங் தமது ஊழியர்கள் பலர் புற்றுநோயால் பாதிப்புக்கு உள்ளானதற்கு வருத்தம் தெரிவித்து ஊழியர்களின் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் போன் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய், கருக்கலைப்பு மற்றும் சில தொழிலாளர்கள் உயிர் இழப்பு போன்ற விஷயங்கள் நிகழ்ந்துள்ளதாக ஆய்வுகள் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக சியோல் நீதிமன்றத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

அதில் சுமார் 240 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 பேர் இறக்கும் தருவாயில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதன்படி பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ 15 கோடி வரை இழப்பீடை, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி நம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

அதேபோல் செமிகண்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய பணியை உரியமுறையில் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்