189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்தோனேசியா

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

லயன் ஏர் விமானத்தில் இறந்தவர்களைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவுக்குக் கடந்த மாதம் 29-ம் திகதி கிளம்பிய பயணிகள் விமானம் ஜாவா கடலில் விழுந்தது.

இந்த விமானத்தில் பயணிகள், விமான ஓட்டிகள் என மொத்தம் 189 பேர் பயணித்துள்ளனர். விமானம் கடலில் விழுந்ததால் இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மீட்புப் படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக மீதமுள்ளவர்களின் உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் தங்களின் மீட்புப் பணிகளை நிறுத்திகொள்வதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகமது ஸியாகி கூறியிருப்பதாவது, நேற்று பிற்பகல் முதல் இன்று வரை நடைபெற்ற தேடுதலில் இதுவரை எங்களால் எந்த உடலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால் இந்த தேடுதல் பணியைக் கைவிட நாங்கள் முடிவுசெய்துள்ளோம்.

பொதுமக்களிடமும், குறிப்பாக இறந்தவர்களின் குடும்பத்தினரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோன் எனத் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்