வெறும் 5 நிமிடத்தில் 20,000 கோடி சம்பாதித்து காட்டிய அலிபாபா: வெளியான ஆச்சரிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவைச் சேர்ந்த பிரபல அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெறும் 5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் சம்பாதித்து அசத்தியுள்ளது.

உலகில் இருக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அமேசானும், வால்மார்டும் மிக முக்கிய நிறுவனங்களாக இருக்கின்றன.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடம் வகிக்கிறது.

உலக அளவிலும் அலிபாபா நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.

அலிபாபா நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா, எல்லா வருடமும் 11-ஆம் திகதி 11-ஆம் மாதம் மிகப்பெரிய ஆபர்களை அறிவிப்பார்.

அந்த வகையில் சீனாவில் இன்றும் இந்த விற்பனை நிறைய ஆபர்களுடன், நிறைய தள்ளுபடிகளுடன் துவங்கியது.

விற்பனை துவங்கிய 5 நிமிடங்களில் பொருட்கள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. சீனாவில் இருக்கும் பல கோடி மக்கள் பொருட்களை வாங்கியதால், வெறும் 5 நிமிடத்தில் 20,000 கோடியை சம்பாதித்துள்ளது.

விற்பனை அசுர வேகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், விற்பனை துவங்கிய 1 மணி நேர முடிவில் 70,000 கோடி விற்பனை நடந்துள்ளது.

இன்று மாலைக்குள் இதன் முடிவு இதைவிட நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நிறுவனம் 1.8 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்