முத்துக்களாலான ஆணுறை... 11 மணி நேரத்தில் 3 பெண்கள் சீரழிப்பு: இளைஞர் கும்பலின் நரவேட்டை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியில் மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தமது காதலருடன் பேசிக்கொண்டு நின்றிருந்த ஹன்னா கொர்னேலியஸ் என்ற 21 வயது மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியது.

பின்னர் பாறாங்கல் பயன்படுத்தி குறித்த மாணவியின் தலையை சிதைத்து கொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அதே நாள் இரவு மேலும் இரு இளம்பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜெரால்டோ பார்ஸன்ஸ்(27), வெர்னான் விட்போய்(33), நஷ்வில்லி ஜூலியஸ்(29), மற்றும் ஈபேன் வான் நெபெர்ஸ்க்(28) ஆகிய நால்வரும் மாணவி ஹன்னா கொர்னேலியசை கொலை செய்த பின்னர் அன்று இரவு முழுவதும் சுமார் 11 மணி நேரம் நகரம் முழுவதும் தங்களது வாகனத்தில் வலம் வந்துள்ளனர்.

ஹன்னா கொலை வழக்கில் கேப் டவுன் உயர் நீதிமன்ற விசாரணையில் நால்வரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,

தற்போது அந்த கும்பல் தொடர்பில் நடுங்கவைக்கும் காணொளி ஒன்று தனியார் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவி ஹன்னாவை கொலை செய்து உடலை வீசிவிட்டு சென்ற அந்த கும்பல், அதிகாலையில் பணிக்கு சென்ற பெண் ஒருவரை கடத்தியுள்ளது.

அவரையும் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, ஹன்னாவை தாக்கிய அதே பகுதியில் குற்றுயிரான நிலையில் கைவிட்டு சென்றுள்ளது.

தொடர்ந்து மேலும் ஒரு பெண்ணை சாலை ஓரத்தில் இருந்து கடத்திச் சென்றுள்லதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை ஹன்னா கொலை வழக்கு தொடர்பில் இறுதி தீர்ப்பு வெளியாகாத நிலையில் தற்போது வெளியான இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டும், திங்களன்று வெளியாகவிருக்கும் தீர்ப்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெரால்டோ பார்ஸன்ஸ் ஹன்னாவை முத்துக்களாலான ஆணுறை பயன்படுத்தி துன்புறுத்தியதாக வெளியிட்ட தகவல் கேப் டவுன் நீதிமன்றத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்