வயதானவர்கள் எடுத்த மோசமான முடிவு! இலங்கையை சேர்ந்த ஐ.நா பெண் தூதர் பாய்ச்சல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மூடிய அறைக்குள் அமர்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோசமான முடிவை எடுத்துள்ளனர் என்று இலங்கை அதிபருக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் இளைஞர் விவகார பிரதிநிதி ஜெயத்மா விக்கிரமநாயகே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஜெயத்மா, ஐ.நா. பொதுச் செயலாளரின் இளைஞர் விவகார பிரதிநிதியாக இருப்பவர். இவர் இலங்கை நிலவரம் குறித்து கவலை தெரிவித்து டுவிட் போட்டுள்ளார்.

அதில், ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. அரசியலமைப்பும், ஜனநாயக விழுமியங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. சில வயதான நபர்கள் மூடிய அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நாட்டின் தலைவிதியை முடிவு செய்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல்வாதிகளுக்கு எனது கோரிக்கை ஒன்றுதான். நாட்டின் ஜனநாயகத்தை மதித்து காப்பாற்றுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்க முயற்சியுங்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அதை சீர் செய்ய முயலுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்