பாத்ரூம் சென்ற நபரின் மர்ம உறுப்பை கடித்த பாம்பு: வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஒளிந்திருந்த வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் கழிவறைக்கு சென்ற இளைஞனின் மர்ம உறுப்பை பாம்பு கடித்ததால், அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கைச் சேர்ந்தவர் Terdsak Kaewpangpan. 45 வயதான இவர் கடந்த 8-ஆம் திகதி காலை காலை தன்னுடைய அலுவலகத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்த 10 அடி நீளம் கொண்ட கொண்ட பாம்பு அவரின் மர்ம உறுப்பை கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் பாம்பு கடித்ததை உணர்ந்தேன், அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன்.

பாத்ரூம் செல்பவர்கள் இனி கவனமாக செல்ல வேண்டும். இது போன்று இருக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் பாம்புகள் ஒளிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் அடுத்த 30 நிமிடத்திற்குள் அங்கு விரைந்து பாம்பை பிடித்துச் சென்றுவிட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்