வெளிநாடுகளில் உடம்பை விற்கும் பெண்கள்... உணவுக்காக சொந்த பிள்ளைகளையும் விற்கும் கொடுமை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பொருளாதார நெருக்கடி, சர்வாதிகாரம் உள்ளிட்ட காரணங்களால் கடும் பின்னடைவை சந்திக்கும் வெனிசுலா நாட்டில் பெண்கள் தங்கள் குடும்பத்தின் பட்டினி போக்க பாலியல் தொழில் செய்யும் கொடூரம் அரங்கேறி வருகிறது.

எதிர்கால திட்டம் ஏதுமின்றி முடிவுகள் எடுத்து கடும் பொருளாதார சிக்கலில் தவிக்கும் நாடு வெனிசுலா.

சமீப காலமாக இங்கிருந்து வெளியாகும் தகவல்கள் உலக நாடுகளை உல்லுக்கும் வகையில் அமைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி அதி தீவிரமடைந்த நிலையில் இங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

குடும்ப உறுப்பினர்களின் பட்டினியை போக்க பெண்கள் அண்டை நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டுமின்றி பட்டினியால் சொந்தம் பிள்ளைகள் அவதிக்குள்ளாவதை பொறுக்காமல் பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நாட்கள் உணவின்றி தவிக்கும் பிள்ளைகளை எதுவும் செய்ய முடியாத பெற்றோர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றுவதாகவும் கூறப்படுகிறது.

தெருக்களில் பொலிசாரின் கெடுபிடி, பிச்சை எடுப்பதால் பலரின் கேலி கிண்டல், உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால் உணவு தேவைக்கு இல்லாத நிலை என அங்குள்ள சிறார்கள் சர்வதேச ஊடகங்களிடம் பதிவு செய்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணம் அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தவர்களில் ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் உள்ளனர்.

தற்போது பாலியல் தொழில் செய்து பணம் ஈட்டுகின்றனர். பெரும்பாலானோர் கொலம்பியாவுக்குள் குடியேரியுள்ளனர்.

ஆவணங்கள் தேவையில்லாத தொழில் என்பதால் பல பெண்கள் இரவு விடுதிகளில் பாலியல் தொழில் செய்து வருகின்றனர்.

உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவை தாக்கிய பொருளாதார நெருக்கடியின் 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பதிப்பு தான் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்